Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/25/2017
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுக வாக்குகள் இரண்டாக பிரியும் என நினைத்திருந்தபோதிலும், திமுகவால் 3வது இடத்திற்கே வர முடிந்தது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அரசுக்கு எதிராக தீவிர எதிர்ப்பலை இருந்தபோதிலும், அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது.

இதற்கு முன்பாக நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் திமுக ஒரு சீட்டை கூட வெல்ல முடியவில்லை. ஆனால் பாஜக கன்னியாகுமரியிலும், பாமக தருமபுரியிலும் வெற்றி பெற்று திமுகவுக்கு கூடுதல் ஷாக்.இது பரவாயில்லை. அப்போதாவது ஜெயலலிதா என்ற ஆளுமை திமுக தோல்விக்கு காரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் என பிரிந்து பிறகு சேர்ந்து, தினகரன் தரப்பு ஒருபக்கம் தனி ஆவர்த்தனம் பாடி.. சொல்லும்போதே மூச்சு முச்சு முட்டும் இத்தனை தகராறுகளுக்கு நடுவே நடந்த ஒரு இடைத் தேர்தலில் திமுக 3வது இடத்திற்கு போயுள்ளது.

செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இன்னும் கொஞ்சம் எழுச்சியை எதிர்பார்க்கிறார்கள் திமுகவினர். இதில் கருணாநிதி செய்த ஒரு மாஜிக்கை ஸ்டாலின் செய்ய தவறி வருகிறார். ஆனால் அதை தினகரன் சரியாக செய்கிறார் என்பதில் ஒளிந்துள்ளது தினகரனை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான காரணம்.

அதிமுகவுக்கு மாற்றாக அதே அதிமுகவிலிருந்து வந்த சுயேச்சை தினகரனை தேர்ந்தெடுத்த மக்கள் ஏன் நீண்ட கால போட்டியாளரான திமுகவை மாற்றாக ஏற்கவில்லை? இதற்கு கருணாநிதி ஸ்டைல் அரசியலை இப்போது ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை என்பது முக்கிய காரணம். கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதுமே செய்திகளின் நாயகனாக அவர்தான் இருப்பார். தன்னை சுற்றியே தமிழக அரசியல் சுழல காரணமாக இருப்பார்.

Though splitting of AIADMK votes in the by poll, the DMK could come to the 3rd spot at the RK Nagar. This is the reason.


For More Updates Follow Us On

Get Instant News Updates


Get Latest Entertainment Updates


Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos


Follow Us On G+


Like Us On Facebook


Follow Us On Twitter


Download Our Oneindia Tamil Android App


Download Our Oneindia Tamil iTunes App

Category

🗞
News

Recommended