தினகரன் டீம் என்ன மாதிரி பிளான் யோசிக்குறாங்க!- வீடியோ

  • 6 years ago
"எதுவா இருந்தாலும் ப்ளான் பண்ணி, பண்ணனும்.. ஓகேஏஏ" என்ற போக்கிரி திரைப்படத்து வடிவேலு பாணியில், ரொம்பவே ப்ளான் செய்து களமிறங்கியுள்ளது டிடிவி தினகரன் தரப்பு. இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டு இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ என்றார். அந்த வீடியோ, உண்மையா பொய்யா என்ற சர்ச்சை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தபோதே, தேர்தல் ஆணையம், இந்த வீடியோக்களை ஒளிபரப்ப கூடாது என மீடியாக்களுக்கு அறிவுறுத்தியது.

தேர்தலுக்கு ஒருநாள் முன்பாக தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய விவகாரங்களை வெளியிட கூடாது என்பது விதிமுறை. அதன் அடிப்படையில் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஜெயலலிதா கொச்சைப்படுத்தப்படுவதால், இந்த வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் பேட்டியில் குறிப்பிட்டார். ஆனால், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி, சசிகலா மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தால், தினகரன்தான் அந்த வீடியோவை வெளியிட்டிருக்க வேண்டும்.

Opposition parties may call for the Disqualification of Dinakaran from the RK Nagar election by claiming that the video was released for election benefit.

Recommended