Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/20/2017
புதுமண தம்பதிகள், கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அனுஷ்கா ஷர்மாவும் எடுத்துக்கொண்ட புது போட்டோ ஒன்று வைரலாக சுற்றி வருகிறது. இத்தாலியில் இருவரும் திருமணம் செய்த நிலையில், குட்டியாக ஒரு ஹனிமூன் ட்ரிப் சென்ற அவர்கள், இப்போது டெல்லி திரும்பியுள்ளனர். நாளை டெல்லியில் தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதாக இருந்த நிலையில் இருவரும் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் படம் வைரலாகியுள்ளது.

இந்த படத்தில் விராட் கோஹ்லி ஷெர்வானி ஆடை அணிந்துள்ளார். அனுஷ்கா இளஞ்சிவப்பு ஆடை அணிந்து காட்சியளிக்கிறார். கழுத்தில் மப்லர் போட்டு கோஹ்லி பாலிவுட் நடிகர்களை நினைவுபடுத்துகிறார்.

ஏற்கனவே இருவரும் பனி சூழ்ந்த பிரதேசத்தில் எடுத்த ஒரு க்யூட் போட்டோ வைரலாக சுற்றி வந்தது. இப்போது இந்த போட்டோவும் சுற்றுகிறது. இருவரும் இன்னும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. ஆனால் போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக வெளியே வந்துகொண்டுள்ளது.



Virat and Anushka are in Delhi for their wedding reception which is suppose to be held on 21st Decemeber in the national capital.

Category

🗞
News

Recommended