Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/19/2017
நாட்டிலுள்ள சுமார் பிட்காயின் வர்த்தகர்கள் 4-5 லட்சம் பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க ரெடியாகியுள்ளது வருமான வரித்துறை.

இதுகுறித்து ஐடி வட்டாரத்தில் கூறுகையில், இந்தியாவில் பிட்காயின் வர்த்தகம் செய்து வருவதில், 4-5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். அவர்களின் வணிக மதிப்பு குறித்த கேள்விகள் அதில் இடம் பெற்றிருக்கும்.

கருப்பு பணம் பிட்காயினாக மாற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு ஐடி தயாராகிறது.இந்தியாவைப் பொருத்தவரையில், அதனை பயன்படுத்தி ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் நாங்கள் பொறுப்பு கிடையாது என்பதை ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்து விட்டது.

பிட்காயின் வர்த்தகத்துக்கான உரிமத்தை எந்த நிறுவனத்துக்கும் ரிசர்வ் வங்கி வழங்கவில்லை. இருப்பினும், இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பிட்காயின் வர்த்தகத்துக்கு முறைப்படி தடை விதிக்கவில்லை. இதனால், அதன் வர்த்தகம் இந்த நாடுகளில் களைகட்டியுள்ளது.

சர்வதேச அளவில் நடைபெறும் போதைமருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு பிட்காயின்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் உண்டு.

பிட்காயினை கட்டுப்படுத்த எந்த ஒரு அமைப்புமே இல்லை. இது ஒரு டிஜிட்டல் கரென்சி. எனவே கட்டுப்பாடு இன்றி புழங்குவதை அரசுகள் அனுமதிப்பதில்லை. எனவே நெருக்கடி அதிகரிக்கலாம். அதேநேரம் பிட்காயினை அறிமுகம் செய்ததாக நம்பப்படும் ஜப்பானில் இது சிறப்பான வர்த்தகமாக உள்ளது.

Widening its probe into bitcoin investments and trade, the Income Tax (I-T) department is set to issue notices to 4 to 5 lakh high networth individuals (HNI) across the country who were trading on the exchanges of this unregulated virtual currency.

Category

🗞
News

Recommended