தமிழ் சினிமாவிற்கு விஜய் டிவியிலிருந்து வரும் இன்னொரு ஹீரோ !!- வீடியோ

  • 6 years ago
விஜய் டி.வி-யில் நிகழ்ச்ச்சித் தொகுப்பாளராக இருந்து சிவகார்த்திகேயன், சந்தானம், மா.பா.கா.ஆனந்த் உள்ளிட்ட பலர் சினிமாவில் ஹீரோவாகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து ஹீரோவாகியிருக்கிறார் ஜெகன். விஜய் தொலைக்காட்சியில் 'மனிதன் பாதி மிருகம் பாதி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் ஜெகன். நண்டு ஜெகன் விஜய் டி.வி-யில் இப்போதும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவர் இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார்.
ஜெகன், 'கண்ட நாள் முதல்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். பல படங்களில் காமெடியானாக நடித்தாலும் அயன் படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

அதன் பிறகு கோ, அம்புலி, பையா, மரியான், நான் சிவப்பு மனிதன், மாப்பிள்ளை உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். தற்போது 'எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல' படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரஹானா என்ற புதுமுகம் நடிக்கிறார். பாடலாசிரியர் பிறைசூடன் வில்லனாக நடிக்கிறார். சிவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், முருகலிங்கம் என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார்.


Sivakarthikeyan, Santhanam and Ma.ka.pa. Anand are turned as heroes from Vijay TV. Nandu Jegan is the next hero in that line. Nandu Jegan is still working as anchor in Vijay TV. He is now known as a hero of 'Enakku innum kalyanam aagala'.

Recommended