ஒரு பாலத்தின் இருமுனைகளிலும் இருமாவட்ட போலீசார் வசூல் - வீடியோ

  • 7 years ago
காவேரி பாலத்தின் இரு புறத்திலும் இரு மாவட்ட காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி வசூல் செய்வதை கண்டித்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டத்தையும் நாமக்கல் மாவட்டத்தையும் இணைக்கும் வாங்கல் பகுதியில் உள்ள காவேரி பாலத்தில் ஒருபுறம் கரூர் மாவட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மறு புறம் நாமக்கல் போலீசார் வாகன சோதனை செய்கின்றனர். இரு மாவட்ட போலீசாரும் வாகன சோதனையின் போது முறையான ஆவணங்கள் இன்றி உள்ளவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். ஒரு பாலத்தின் இருமுனைகளிலும் இரு மாவட்ட போலீசார் அடுத்தடுத்து வாகன சோதனை நடத்தி வசூல் செய்வதை கண்டித்து பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாலத்தின் நடுவில் நின்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.