Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/18/2017
குருவி பிடிக்க சென்ற நான்கு சிறுவர்கள் ரசாயன கழிவு நீர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் மேட்டுரை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் நான்கு பேர் குருவி பிடிக்க சென்றுள்ளனர் .காவேரி ஆற்று படுகையில் ஆங்காங்கே தண்ணீர் குட்டைகள் தேங்கி கிடக்கிறது தண்ணீரை பார்த்ததும் அதில் குளிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு தோன்றியதால் குட்டைக்குள் இறங்கியபோது தண்ணீரில் மூழ்கினர் . அக்குட்டை தண்ணீரில் ரசாயன கழிவு நீரும் கலந்து இருந்ததால் மூச்சு திணறி உயிரிழந்தனர்

காலையில் சென்ற சிறுவர்கள் இரவாகியும் வீடு திரும்பாததால் சிறுவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . போலீசாரும் சிறுவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்ததாக அப்பகுதியில் ஆடு மேய்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தீயணைப்பு படையினருடன்

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களை மீட்டனர் .இச்சம்பவம் பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Des : The death of a four-year-old child in a pile of chemical waste has caused a tragedy among the locals

Category

🗞
News

Recommended