Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/16/2017
ஆர்கே நகரில் காலை முதல் பணப்பட்டுவாடா என தொகுதியே போர்க்களமாக காட்சி அளிக்கும் நிலையில் சாலையில் படுத்து கொண்டு ரவுசு விடும் இந்த குடிகாரரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆர் கே நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே ஆர் கே நகரில் கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி மையத்தில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் அதே மையத்தில் ரூ. 13 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பார்வையாளர்கள் இதுதொடர்பாக பச்சையப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக 6 பேரை போலீஸார் தவறுதலாக கைது செய்துவிட்டதாக பொதுமக்கள் மறியல் செய்தனர். அவர்களை போலீஸார் விரட்டி அடித்தனர். ஒரு ஓட்டுக்கு ரூ. 6000 விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பணப்பட்டுவாடாவை தடுக்காததை கண்டித்து திமுக, தினகரன் அணியினரும் மறியல் செய்தனர். கிட்டதட்ட ஆர்கே நகரே போர்க்களமாகி வரும் நிலையில் அங்கு ஒரு சாலையில் தான் வேற்று தொகுதி காரர் போல் குடிவிட்டு படுத்துக் கொண்டிருக்கும் ஒருவர் ரவுசு விடும் வீடியோ வைரலாகி வருகிறது. இவ்வளவு ரணக்களத்திலயும் கிளுகிளுப்பு கேக்குது என்று மக்கள் முணுமுணுத்து கொள்கின்றனர்.




RK Nagar is like war place after money distribution ruckus in there. Amidst drunkard rocks in RK Nagar. Video goes viral.

Category

🗞
News

Recommended