Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/14/2017
தமிழகம் முழுவதிலும் வடமாநில கொள்ளையர்கள் பதுங்கியுள்ளனரா என்று சோதனை நடத்தும் படி காவல்துறை தலைவர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தங்கியுள்ள வடமாநில கொள்ளையர்கள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று சோதனை நடத்தும்படி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் உள்ள பகுதிகளில் கட்டிட வேலை மற்றும் கூலி வேலைக்கு வந்து தங்கியுள்ளவர்களிடம் அவர்களின் முகவரிகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ள வடமாநிலத்தவர்களையும் போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகப்படும் படி வடமாநிலத்தவர்கள் யாரேனும் இருந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்கும் படி காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Des : The police chief has ordered the police to conduct a raid on the state of Tamil Nadu to check whether the northern burglars are hiding.

Category

🗞
News

Recommended