Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/14/2017
கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் சூதாட்டம் செய்ய எந்த மாதிரியான சிக்னல்கள் கொடுப்பார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா என்ற இரண்டு சூதாட்ட நபர்கள் இதுகுறித்த விவரங்களை, தனியார் பத்திரிக்கை நடத்திய ஸ்டிங் ஆப்ரேஷனில் கூறியுள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் எந்த மாதிரியான சமயங்களில் இப்படி செய்வார்கள், அதை யார் பார்த்து தகவல் தெரிவிப்பார்கள் என்றும் கூறியுள்ளனர். இதற்கு பின்பு இருக்கும் திரில்லான விஷயங்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவல்களின் மூலம் சில முக்கிய தலைகளின் தலை உருள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஸ்டிங் ஆப்ரேஷன் ஐசிசியை கதிகலங்க வைத்துள்ளது.

முதலில் சூதாட்டத்திற்கான ஸ்கிரிப்ட் வீரர்களிடம் வழங்கப்படும். எந்த ஓவரில் எத்தனை ரன் கொடுக்க வேண்டும், எந்த ஓவரில் எத்தனை ரன் அடிக்க வேண்டும் என்று அந்த ஸ்கிரிப்டில் இருக்கும். இது எழுத்து வடிமாக பிரிண்ட் செய்து கொடுக்கப்படும். இதுதான் சூதாட்டத்தில் முதல்படி என்று சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா தெரிவித்துள்ளனர். சூதாட்டம் செய்ய ஒப்புக் கொள்ளும் வீரர்களை தனியாக சந்தித்து இந்த ஸ்கிரிப்ட் அளிக்கப்படும்.

The bookies named Sobers Joban and Priyank Saxena are the most important person in betting field. They explained about the various signals of betting in cricket field.

Category

🥇
Sports

Recommended