மோகன்லால் நடித்துவரும் 'ஒடியன்' திரைப்படத்தை விளம்பரப் படங்கள் இயக்குநர் ஶ்ரீகுமார் மேனன் இயக்குகிறார். இந்தப் படத்தை மோகன்லால் சொந்தமாகத் தயாரிக்கிறார். மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மோகன்லால் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். 'ஒடியன்' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், மோகன்லால் இளமையான தோற்றத்தில் நடிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் வெளியான 'கூதரா' படத்திற்குப்பின் மிகவும் வித்தியாசமான தோற்றங்களில் மோகன்லால் நடித்து வரும் படம் தான் 'ஒடியன்'. இதில் இளமை மற்றும் வயதான தோற்றங்களில் ஒடியன் மாணிக்கன் என்கிற பிளாக் மேஜிசியனாக நடித்து வருகிறார் மோகன்லால்.
Sreekumar Menon is directing the movie 'Odiyan' starring Mohanlal.