Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/13/2017
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் கிடைத்த விவரங்கள் பற்றி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ராஜநாயகம் கூறியதாவது: டி.டி.வி.தினகரனுக்கு இந்த தேர்ததில் ஒதுக்கப்பட்டு இருக்கும் பிரஷர் குக்கர் சின்னத்தை அத்தொகுதியிலுள்ள 91.6 சதவீதம் மக்கள் எளிதாக அடையாளம் காண்கிறார்கள்.
அதேநேரம், இரட்டை இலை சின்னம் 81.1 சதவீதம் பேரால் அடையாளம் காணப்பட்டு உள்ளது. பிரஷர் குக்கர் சின்னம் அறிவிக்கப்பட்ட ஓரிரு நாள்களிலேயே ஏறத்தாழ தொகுதி முழுவதும் அது குறித்த தகவல் நன்றாக சென்று சேர்ந்துவிட்டது.

TTV Dinakaran will win in the RK Nagar by poll, reveals a survey which conduct by professor Rajanayagam and his team.

Category

🗞
News

Recommended