வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா காம்போ வொர்க் ஆகும் பார்ட்டி வெளியீடு- வீடியோ

  • 7 years ago

பார்ட்டி பட டீஸரை பார்த்தவர்கள் வெங்கட் பிரபு வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள். வெங்கட் பிரபு படங்களில் கேலி, கிண்டல் தூக்கலாக இருக்கும். இந்நிலையில் அவர் மிர்ச்சி சிவா, ஜெய், ரெஜினா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரை வைத்து எடுத்துள்ள பார்ட்டி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸர் மோடி அறிவிப்புடன் துவங்கி அதே அறிவிப்புடன் முடிகிறது.
பணமதிப்பிழப்பு குறித்து மோடி அறிவிப்பு வெளியிட்டதை டீஸரில் காண்பித்துள்ளார் வெங்கட் பிரபு. இதில் ஏதோ உள்குத்து இருக்கு, வெங்கட் பிரபு அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாது. வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
பாகுபலி படத்தில் கம்பீரமாக வந்த சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர் பார்ட்டிக்கு சென்றால் இப்படித் தான் இருக்கும் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
பார்ட்டி டீசர் . படம் செம ஜாலியா இருக்கும் போல # பிரேம்ஜி பிஜிஎம் சூப்பரா இருக்கு. @Premgiamaren


Venkat Prabhu's Party teaser is out. It starts and ends with PM Modi's announcement about demonetisation. Fans are impressed by Venkat Prabhu's Party and couldn't wait to watch the movie.

Recommended