எந்தெந்த ராசிக்காரர், என்னென்ன விஷயத்தில் மோசமாக நடந்துக் கொள்வார்கள் தெரியுமா?- வீடியோ

  • 7 years ago
ஒவ்வொரு ராசிக் காரர்களுக்கும் ஒவ்வொரு பொதுவான இயல்பு குணம் இருக்கும். அது தொழில் சார்ந்தும், இல்லறம் சார்ந்தும், உறவுகளில் அவர்கள் ஈடுபடும் விதம், ஒரு சூழலை அவர்கள் கையாளும் முறை, ஒரு செயலின் போது அவர்கள் எப்படி ரியாக்ட் ஆகிறார்கள் என அனைத்திலும் இந்த பொது குணத்தின் தாக்கம் கொஞ்சம் இருக்க தான் செய்யும். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக் காரர்களிடமும், அந்தந்த ராசியின் மூலமாக காணப்படும் ஒரு மோசமான குணாதிசயமாக கருதப்படுவது என்ன? அதனால் அவர்கள் வாழ்க்கை எப்படியானதாக இருக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கிறோம்....

மோதல் போக்கு: மக்களிடம் மோதல் போக்குடன் நடந்துக் கொள்வார்கள். அவர்கள் பேசும் போது கூட சில சமயங்களில் அடிதடிக்கு போவது போல இருக்கும். இது இந்த ராசியின் இயல்பாக கருதப்படுகிறது. அதே போல வாக்குவாதம் செய்வதிலும், அடம் பிடிப்பதிலும் கூட இவர்கள் மேலோங்கி காணப்படுவார்கள்.

அடம் பிடித்தல்: அடம் பிடிக்கும் குணம் அதிகமாக இருக்கும். இதை இந்த ராசிக்காரர்களிடம் அதிகமாக காண முடியும். தங்கள் வாழ்வில் தங்களுக்கு எது வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருப்பார்கள். மற்றவர்கள் இது நல்லது தான், வாழ்வை மேம்பட உதவும் என்று கூறினாலும் கூட அதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். சில செயல்களில் பிடித்த வைத்த பிள்ளையார் போல தான் இவர்களது தீர்க்கம் இருக்கு.

These Bad Habits Define Each Zodiac Sign

Recommended