அதெப்படி தேர்தல் அதிகாரியை நான் மிரட்ட முடியும்? கேள்வி கேட்கிறார் விஷால்- வீடியோ

  • 6 years ago
நான் மிரட்டியதால் என்று வேட்புமனுவை முதலில் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் அதிகாரி கூறுவதில் உண்மையில்லை என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார் நடிகர் விஷால். 5 ஆம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் விஷால் தொடர்ச்சியாக முட்டி மோதிப்பார்த்தார். ஆர்கே நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஆனால் விஷாலின் கோரிக்கையை ஏற்க வேலுச்சாமி மறுத்து விட்டார்.

நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் சுமதி மற்றும் தீபன் இருவரின் கையெழுத்து போலியானது என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் மிரட்டப்பட்டதால் சுமதியும், தீபனும் பின்வாங்கியதாக ஆடியோ ஆதாரத்தை விஷால் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லகானியிடம் புகார் மனு அளித்தார். ஆனால் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது என்று தேர்தல் அதிகாரி கூறி விட்டார்.

Vishal said that, Democracy at its lowest low. The nomination made by me was initially accepted and later when I left, has been announced as invalid i am not threatning election officer.

Recommended