Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/7/2017
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கி செல்வாக்கை நிரூபிக்காவிட்டால் தினகரன் இடத்தில் இனி திவாகரன்தான் என முடிவு செய்துள்ளாராம் சசிகலா. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரத்தை நடத்த இருக்கிறார் தினகரன். தேர்தல் முடிவில் பெரும்பாலான அ.தி.மு.க நிர்வாகிகள் நம் பக்கம் வந்துவிடுவார்கள். விரைவில் இரட்டை இலையும் நம் பக்கம் வரும் என நம்பிக்கையோடு இருக்கிறது தினகரன் அணி. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரு கட்சிகளே தொடர்ந்து ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று வந்துள்ளன. வேறு எந்தக் கட்சியும் பரிசோதனை அடிப்படையில்கூட இந்த இரண்டு கட்சிகளைத் தாண்டி வாக்குகளைப் பெற்றதில்லை.

ஆகையால் மதுசூதனனும் மருது கணேஷும் நேரடி போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு எதிராகக் களமிறங்கிய விஷாலில் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
இதனால் தினகரன் தரப்பினர் மிகுந்த வேதனையில் இருப்பதாகச் சொல்கின்றனர் சசிகலா உறவினர்கள். இதுதொடர்பாக பேசும் அவர்கள், ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணியால் எந்தப் பலனும் இல்லை என்பதை சுட்டிக் காட்ட பலவகைகளில் முயற்சி செய்து வருகிறார் தினகரன். இந்தக் கோஷ்டியை வைத்துக் கொண்டு உங்களால் எதுவும் செய்ய முடியாது' என மத்திய அரசின் பிரதிநிதிகளிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

Sources said that If Dinakaran not secure huge votes in RK Nagar by poll, Sasikala will support Divakaran faction.

Category

🗞
News

Recommended