Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/7/2017
உத்தர பிரதேசத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மீரட் நகரத்தில் இருக்கும் தியேட்டரில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த சிறுமிக்கு 16 வயது கூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சிறுமியின் நண்பர்களே இந்த கொடூரமான செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த செயலை செய்வதற்காக அந்த சிறுமியின் நண்பர்கள் பல நாட்களாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

டெல்லியின் மீரட் நகரத்தில் வசிக்கும் அந்த 16 வயது சிறுமி தனது நண்பர் ஒருவருடன் அங்கு இருக்கும் தியேட்டர் ஒன்றிற்கு சென்று இருக்கிறார். படம் பார்பபதற்கு முன்பு அவர்கள் கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்து இருக்கிறார்கள். மேலும் காலை உணவு சாப்பிட செல்லும் போது அந்த பையனின் நண்பன் ஒருவனும் அவர்களுடன் இணைந்து இருக்கிறான். இவர்கள் மூவருமாக சென்று பின் படம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த சிறுமியை இருவரும் திடீர் என்று வெளியே அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தியேட்டர் மாடியில் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அதே இடத்தில் மயங்கி விழுந்து இருக்கிறார். பின் அந்த சிறுமி மயக்கம் தெளியும் வரை அவர்கள் அங்கேயே காத்து இருந்துள்ளனர்.

Category

🗞
News

Recommended