Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/6/2017
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்தில் தீபாவின் கணவர் மாதவன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது அக்குழு ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது

இதையடுத்து இன்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப பட்டது அதன்படி இன்று மாதவன் சென்னை எழிலகத்தில் நடைபெற்று வரும் விசாரணை ஆணையத்திற்கு சென்று விளக்கம் அளித்தார்.

Deepa's husband Madhavan was present at the inquiry commission on Jayalalithaa's traetment.

Category

🗞
News

Recommended