என்னது டோணி ஓய்வு பெறுகிறாரா?.. இது நம்ம ஆளு இல்லைங்க வேற டோணி!- வீடியோ

  • 6 years ago
கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக இருப்பது டோணி மட்டும் தான். அவர் எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றுதான் பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது டோணி மொஹாலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உண்மையா என்று பலரும் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து தற்போது தெளிவான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக இருப்பது டோணி மட்டும் தான். அவர் எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்றுதான் பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது டோணி மொஹாலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி உண்மையா என்று பலரும் கேட்டுக்கொண்டு இருந்த நிலையில் அதுகுறித்து தற்போது தெளிவான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இந்த நிலையில் கண்டிப்பாக டோணி 2020ல் நடக்கும் டி-20 உலகக் கோப்பையில் விளையாட கூடாது என்று சிலர் வெளிப்படையாக கூறினார். இதையடுத்து நேற்று டோணி தன்னுடைய ஓய்வு குறித்து அறிவித்துவிட்டதாக செய்திகள் வெளியானது. அதன்படி அவர் இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடக்க இருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் கடைசியாக இடம்பெறுவர் என்று கூறினார்கள். இந்த செய்தி இணையம் முழுக்க வைரல் ஆனது.

தற்போது இந்த செய்தி உண்மைதானா என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மும்பை போலீசுக்கு சொந்தமான பாதுகாப்பு நாய் ஒன்று தனது பணியில் இருந்து டிசம்பர் 13ம் தேதி ஓய்வு பெறுகிறது. கடைசியாக அந்த நாய் அதே நாளில் நடக்கும் மொஹாலி கிரிக்கெட் போட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். அந்த நாய்க்கு மும்பை போலீஸ் டோணி என பெயர் வைத்து இருக்கிறார்கள். இதன்காரணமாகவே டோணி ஓய்வு பெற போவதாக செய்தி தீயாக பரவி இருக்கிறது.

தற்போது டோணியின் ஓய்வு செய்தி பொய் என தெரிந்ததும் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இவர் ''முதலில் நீங்கள்தான் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் என்று நினைத்தேன். நல்லவேளை அது காவல் நாய்'' என்று கூறி லவ் யூ டோணி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Dog named Dhoni will retire in Mohali one day match against Sri Lanka. Social media got viral after people thought its Mahendra Singh Dhoni retirement.

Recommended