தவானுக்காக, ஷூவை கழற்றிவிட்டு ஓடிய இலங்கை வீரர்.. அதான் கோஹ்லி வந்துட்டாருல்ல

  • 6 years ago
கேட்ச் பிடிக்க போனபோது ஷூவை கழற்றி போட்டு ஓடியுள்ளார் இலங்கை வீரர் லக்மல். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு நடுவேயான 3வது டெஸ்ட் போட்டியில்தான் இந்த காமெடி சம்பவம் நடந்துள்ளது.

பெரேரா பந்து வீச்சில், இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஸ்வீப் ஷாட் அடிக்கப்போக பந்து மேலெழும்பியது. எனவே கேட்ச் பிடிக்க அவசரமாக ஓடினார் லக்மல். அப்போது ஷூக்களில் ஒன்று கழன்று ஓடியது. ஆனால் அதை பொருட்படுத்தாத லக்மல் பந்து மீதே கவனம் செலுத்தி அந்த கேட்சை சரியாக பிடித்தார். இதன்பிறகு லக்மல் உட்பட இலங்கை வீரர்கள் அனைவருமே இந்த சம்பவத்தை பார்த்து சிரித்தபடி இருந்தனர். இலங்கை வெற்றிக்கு முயல, முதலிலேயே இந்திய விக்கெட்டுகளை வீழ்த்துவது தேவை என்ற நோக்கத்தில் லக்மல் இப்படி ஓடிச் சென்றார். ஆனால், விராட் கோஹ்லியும், முரளி விஜயும் இலங்கையின் கனவை கலைத்து நங்கூரம் போட்டு சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது.
கேட்ச் பிடிக்க போனபோது ஷூவை கழற்றி போட்டு ஓடியுள்ளார் இலங்கை வீரர் லக்மல். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு நடுவேயான 3வது டெஸ்ட் போட்டியில்தான் இந்த காமெடி சம்பவம் நடந்துள்ளது.




In a hilarious incident during the 1st day of the 3rd test match at Feroz Shah Kotla stadium, Lakmal dismissed Shikhar Dhawan in a funny way. After Dhawan played a poor sweep shot on the balling of Parera, Lakmal ran after the ball and look a brillant catch, but what is really funny is that he lost one of his shoe while taking the catch.

Recommended