அண்ணாமலையார் கோவிலில் பரணி தீப தரிசனத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரித்ததால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் தவித்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருநாளின் 10ம் நாளான இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இத்தீப ஏற்றும் நிகழ்ச்சிக்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் விழா என்பதால் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரணி தீபம் ஏற்றும் போது தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் கட்டுப்பாடு விதித்ததால் தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். திருவண்ணாமலையில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Dec : The pilgrims were unable to make the darshan because of the police's control over the security of Barani Deepa in Annamalaiyar temple.