அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

  • 6 years ago
அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கரையை கடக்காமலேயே தென் தமிழகத்தை ஆட்டிப்படைத்துள்ளது. இதனால் தென் தமிழகம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கன்னியாகுமரி, நெல்லை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் தென்மாவட்டங்களில் வெள்ள நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அங்கேயே நீடிப்பதாக கூறினார்.

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தை நோக்கி மேலும் ஒரு புயல் வர வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்தம் புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழக கரையை நெருங்கும்போது புயலாக மாறும் என்றும் அவர் கூறினார்.

அந்த புயலுக்கு சாகர் என பெயர் சூட்டப்படும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் தென் மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.


The Low depression formed in Bay of bengal will be strong within 36 hours. It may change as cyclone. There is chance for tamilnadu to get one more cyclone said Chennai meteorological center.

Recommended