Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/2/2017
இந்த ஆண்டு அதிகமான சூறாவளி காற்று-மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும் என்றும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கும் பஞ்சாங்க பிரதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓகி புயல் தென்மாவட்டங்களை புரட்டிப் போட்டுள்ளது. கனமழை, சூறாவளிக் காற்றால் கன்னயாகுமரி மாவட்டம் உருக்குலைந்துள்ளது. பாதிப்புகளில் சிக்கியுள்ள குமரி மாவட்டம் இருளில் சிக்கித் தவிக்கிறது. புயல் குறித்த முன் அறிவிப்புகளை ஒரு பக்கம் தொழில்நுட்பங்களை வைத்து வானிலை மையம் கணித்து வருகிறது. மற்றொரு புறம் புயல், வெள்ள பாதிப்பு குறித்த பஞ்சாங்க குறிப்பும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பஞ்சாங்கப் பிரதியில் அதிகமான சூறாவளி காற்று வீசும். மழையால் தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழியும், அனைத்து ஆறுகளில் வெள்ளம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி பாதிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. உப்பளம் பாதிக்கும் அந்தமான் காற்றழுத்த தாழ்வுமண்டல்ம் 1510 கிமீ புயல் வீசும் குண்டாறு அணை பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் உள்ளது.
உலகத்தில் அசுப செயல்கள் அதாவது அசம்பாவிதங்கள் நடக்கும். குளிர்காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படும். காற்றழுத்த தாழ்வு கடலூர் 1550 கி.மீட்டரில் உருவாகும். அக்னி பயம். கடலூர்,ராமேஸ்வரம் பாதிக்கும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

Vellore astrologer Panchangam predicting natural calamities going viral in social medias, people were wondering how acurately the current situation is in panchangam.

Category

🗞
News

Recommended