Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/2/2017
நானோ காரின் உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது அந்த நிறுவனம் ஒருநாளைக்கு மொத்தமாக இரண்டு கார்களை மட்டுமே தயாரிப்பதாக தெரிவித்துள்ளது.
உற்பத்தி மட்டும் இல்லாமல் விற்பனையும் பல இடங்களில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. முக்கியமாக கடந்த மூன்று மாதங்களில் மட்டும் விற்பனை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து நானோ உற்பத்தி இன்னும் சில வருடங்களில் மொத்தமாக நிறுத்த வாய்ய்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

உலகிலேயே மிகவும் விலை குறைவான கார் என்ற பெயருடன் டாடா நிறுவனம் வெளியிட்ட கார் தான் 'நானோ'. இந்த கார் வருவதற்கு முன்பே உலகம் முழுக்க வைரல் ஆனது. இதன் அறிமுக விழாவே மிகவும் பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதன் ஒரு லட்ச ரூபாய் என்ற விலை பல நடுத்தர குடும்பங்களை கவர்ந்தது. 2009ல் வந்த அதிரடியாக வந்த காருக்கு வெறும் எட்டே வருடத்தில் ஆயுள் முடிய இருக்கிறது.

TATA Nano is currently struggling in sales. TATA company has decreased the volume of production of Nano car. Officials said that they are producing just 2 Nano car per day

Category

🗞
News

Recommended