குமரி மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்து வீட்டை விழுங்கி இழுத்து சென்ற கடல்.. பகீர் காட்சிகள்

  • 6 years ago
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நீர் வீட்டை அப்படியே கவர்ந்து செல்லும் பகீர் வீடியோ வெளியாகியுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நேற்று காலை புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு 'ஒகி' என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் காற்று மற்றும் மழை, தென் மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
நாகர்கோவில் நேற்று காலையில் இருந்தே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் செல்போன் டவர்கள் சேதம் அடைந்ததால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுக்கவுமே கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சில இடங்களில் 10 அடி முதல் 15 அடி உயரம் வரை அலைகள் எழும்பியதாக கூறப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
Sea water enter village in Kanyakumari district, and took away a house.

Recommended