மற்றொரு 2015 பெருவெள்ளத்திற்கு காரணமாகுமா ஓகி புயல்? தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி- வீடியோ

  • 6 years ago
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை குறித்தும், புதிதாக உருவாகி இருக்கும் ஓகி புயல் குறித்தும் தமிழ்நாடு வெதர் மேன் பேட்டி அளித்துள்ளார். இந்த புயல் எந்த அளவுக்கு தமிழகத்தை பாதிக்கும், எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த சுனாமி எச்சரிக்கை குறித்தும் தனது பேட்டியில் பேசியுள்ளார். தமிழகத்தின் மோஸ்ட் வான்டட் மேனாக இருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் 'ஒன் இந்தியா தமிழுக்கு' அளித்த பேட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

சென்னையில் தற்போது சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வட சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் சின்னம் காரணமாக மழை விட்டு விட்டு பெய்யும். இந்த மழை பெரிய அளவில் சென்னையை பாதிக்காது. நாளை மதியத்திற்கு பின் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தமாக நின்றுவிடும்.

ஓகி புயல் இப்போது திருவனந்தபுரம் பக்கத்தில் இருக்கிறது. இந்த புயல் தமிழகத்திற்கு அருகில் எங்கும் கரையை கடக்காது. கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து அப்படியே அரபிக்கடல் பக்கம் சென்றுவிடும். இது தீவிரமான புயலாக மாறினாலும் அரபிக்கடல் பக்கம் செல்வதால் நமக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.



Tamilnadu Weatherman Exclusive interview on cyclone Ockhi. He says cyclone won't affect Tamilnadu, he also added that rain will stop from tomorrow.

Recommended