அரசியல்வாதிகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஆற்று மணலை கொள்ளையடித்த மாஃபியாக்களுக்கு ஆப்பு!

  • 7 years ago
மணல் குவாரி தொழில் என்பது தமிழகத்தில் அரசியலுடன் இணைத்து பார்க்கப்படுவதாக உள்ளது. மணல் குவாரி அதிபர்கள் அரசில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கிறார்கள். அனைவருக்குமே தெரிந்த ஒரு உதாரணம், சேகர் ரெட்டி. கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் போயஸ் கார்டன் லாபியில் நெருக்கமான சேகர் ரெட்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்தார். இதன் மூலம் கோடி கோடியாக கொட்டியது.

இப்போது துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வமும், சேகர் ரெட்டியும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஒன்றாக வருவது போன்ற போட்டோக்கள் எதிரணியால் இப்போதும் இணையத்தில் சுழன்று வருகிறது.
சேகர் ரெட்டியை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என வளைத்து எடுத்து சிறைக்குள் தள்ளியது சமீப காலத்து வரலாறு. இவர் ஒரு உதாரணம் மட்டுமே. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியாளர்களில் அதிகாரம் படைத்தோரை கைக்குள் போட்டுக்கொள்வது இதுபோன்ற மணல் குவாரி உரிமையாளர்கள் வாடிக்கை.

How sand Mafia looted Tamilnadu with the help of ruling parties, here is the detail

Recommended