ஆறுகளின் ஆன்மாக்களுக்கு விடுதலை...கொஞ்சம் இளைப்பாறுவாய் காவேரி- வீடியோ

  • 7 years ago
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மணல் குவாரிகளையும் மூடும்படி உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஒரு உத்தரவு டெல்டா மாவட்டங்களில் செய்யப்போகும் மாற்றங்கள் சாதாரண விஷயமாக இருக்க போவதில்லை. டெல்டாவில் உள்ள சில ஊர் மக்களின் 25 வருட வாழ்க்கை முறையையே இந்த ஒரு தீர்ப்பு மாற்ற உள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இது ஒரு புதிய புரட்சி. காவிரியில் மக்கள் மூழ்கி இறப்பது தொடங்கி வந்த தண்ணீர் மொத்தமும் ஒரு வாரத்தில் காணாமல் போவது வரை அனைத்தையும் இந்த ஒரு தீர்ப்பு மாற்ற போகிறது.

டெல்டாவில் நடந்த மணல் கொள்ளைக்கும் அங்கு நடக்கும் ஜாதிய பிரச்சனைக்கும் நிறைய தொடர்புகள் இருக்கிறது. மணல் மாஃபியாக்கள் பொதுவாக மணல் கொள்ளைகளில் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது என சாதியை பகடை காயாக பயன்படுத்தி வந்தனர். மணல் எடுப்பதிலும், ஆறுகளில் லாரிகளை வைத்து இடம் பிடிப்பதிலும் நிறைய சண்டைகள் ஏற்பட்டு இருக்கிறது. இதே சண்டைகள் ஊர் சண்டையாகவும், சாதி சண்டையாகவும் மாறியிருக்கிறது.

மணல் லாபி யாரும் நினைத்து பார்க்க முடியாத வகையில் டெல்டாவை ஆட்டிப்படைத்து கொண்டு இருந்தது. கடந்த 25 வருடத்தில் இந்த மணல் மாஃபியா பிரச்சனை காரணமாகவே பலர் கொல்லப்பட்டும், மிரட்டப்பட்டும் உள்ளனர். நிறைய சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிராக பேசியதால் நிறைய பிரச்சனைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.அந்த சமூக ஆர்வலர்களின் கனவுகள் ஒரே நாள் மதியத்தில் வெளியாகிய தீர்ப்பு மூலம் நிஜமாகி இருக்கிறது.

HC has banned all sand mining quarries in Tamilnadu. It will create a huge change in Cauveri and Delta districts.

Recommended