இரட்டை இலையுடன் களத்துக்கு வரும் மதுசூதனன்..வீடியோ

  • 7 years ago
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலையை மீட்டுக் கொடுத்த மதுசூதனனே மீண்டும் அதிமுகவின் வேட்பாளராக போட்டியிடக் கூடும் என தெரிகிறது. ஆனால் மதுசூதனன் வெற்றி பெற்றால் இருப்புக்கே உலை என நினைக்கும் அமைச்சர் ஒருவர் குழிபறித்து குப்புற தள்ள 'வலை' விரித்து காத்திருக்கிறாராம். ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் கடந்த ஏப்ரலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சசிகலா அணியின் தினகரன் மோதினார்.

தினகரனுக்கு ஆதரவாக அப்போது அத்தனை அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் களமிறங்கினர். மேலும் தினகரன் சார்பாக வாக்காளர்களுக்கு தலா ரூ4,000 பட்டுவாடா செய்யப்பட்டது. இதனால்தான் தேர்தலே ரத்து செய்யப்பட்டது.
இப்போது டிசம்பர் 21-ல் மீண்டும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Sources said that AIADMK Senior leaders Madhusudhanan will contest in RK Nagar By election with Two leaves symbol.

Recommended