இரட்டை இலையை வென்றது எடப்பாடி அதிமுக!- வீடியோ
  • 6 years ago
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கே அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இரு பிரிவினரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல், தேர்தல் ஆணையத்திலும் லாரிகள் கொண்டு செல்லும் அளவுக்கு பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்தனர். பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். இன்று இறுதி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகவுள்ளது.

அண்மையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சின்னம் யாருக்கு என்ற விசாரணையை முடித்த தேர்தல் ஆணையம் ஆளும் முதலமைச்சர் தரப்புக்கு அதிக பிரதிநிதிகளின் ஆதரவு இருப்பதாகச் சொல்லி சின்னத்தை கொடுத்தது. குறுகிய காலத்தில் பீஹாரைச் முதல்வர் நிதிஷ்குமார் கட்சியின் சின்ன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துவிட்டது. ஆனால், இரட்டை இலை விவகாரத்தில் பல மாதங்களுக்குப்பிறகு இன்று முடிவு அறிவிக்கப்பட வாய்ப்பு உறுவாகியுள்ளது.


Election comission of India may announce the final judgement today for whoom the ADMK party name and two leaves symbol either to Edappadu Palanisamy faction or Sasikala faction.

Recommended