44 வயதாகும் இரட்டை இலை உதிருமா? முடங்குமா? முகிழ்க்குமா? தேர்தல் ஆணையத்தில் இன்று க்ளைமாக்ஸ்- வீடியோ

  • 7 years ago
தமிழக அரசியலில் கை சின்னம், உதயசூரியனைப் போல நிலைத்து நிற்கும் இரட்டை இலை சின்னத்துக்கு வயது 44. ஆனால் இந்த இரட்டை இலை சின்னம் இனி இல்லாமலே போகுமா? தற்காலிகமாக முடங்குமா? மீண்டும் முகிழ்க்குமா? என்கிற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்க உள்ளது. 1972-ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய நிலையில் திண்டுக்கல் லோக்சபா இடைத் தேர்தல் 1973-ம் ஆண்டு வருகிறது. அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்தது திண்டுக்கல்.

அதிமுகவுக்கான சின்னம் கேட்டு விண்ணப்பிக்கிறார் வேட்பாளர் மாயத்தேவர். மொத்தம் 16 சின்னங்கள் மாயத்தேவரிடம் காண்பிக்கப்படுகிறது. அதில் இரட்டை இலை சின்னத்தைத் தேர்வு செய்து எம்ஜிஆரிடம் கொடுக்கிறார் மாயத்தேவர். அத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மாயத்தேவர் அமோக வெற்றி பெற்று திமுகவை அதிர வைத்தார்.

The Election Commission of India will deliver the verdict on AIADMK's Two Leaves symbol case on Thursday

Recommended