ஜெயம் ரவி நடிப்பில் சக்தி சவுந்தர் ராஜள் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் `டிக் டிக் டிக்'. இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வருகிறார் சக்தி சவுந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும் ஆரோன் ஆசிஸ், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை வெளியாகும் என்று `டிக் டிக் டிக்' படக்குழு அறிவித்தது. அதன்படி, இப்படத்தின் டிரைலரை நவம்பர் 24ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.