அவங்க பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்தணும்: ராதிகா ஆப்தே ஆவேசம்- வீடியோ

  • 7 years ago
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து பேட்டி அளித்துள்ளார் நடிகை ராதிகா ஆப்தே. பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் உள்ளது என்று பிரபல நடிகர்கள், நடிககைள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி அழைப்பவர்களின் பெயரை இதுவரை யாருமே வெளியிடவில்லை. திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கும். பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயரை தெரிவித்தால் நம் கெரியரை நாசமாகிவிடுவார்களோ என்ற பயம் உள்ளது. பெரிய ஆளான அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று கூறினால் மக்கள் நம்புவார்களா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது என்று ராதிகா தெரிவித்துள்ளார். தனது ரசிகர் அஜீத்தின் வேண்டுகோளை ஏற்று அவரை சந்தித்து பேசியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். பெரம்பலூரை சேர்ந்தவர் வளர்ச்சி குன்றிய அஜீத்(20). அவருக்கு நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அவரை சந்தித்து பேச வேண்டும் என்று விரும்பினார். தனது விருப்பத்தை வீடியோ மூலம் தெரிவித்தார். அஜீத்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.