கடல் நீர் மட்டம் உயர்ந்தால் கடலோர கிராமங்கள் மூழ்கும் அபாயம் | Oneindia Tamil

  • 7 years ago
2100-ஆம் ஆண்டுக்குள் கடலின் நீர் மட்டம் உயரும்போது லட்சக்கணக்கான வீடுகள் கடலில் மூழ்கும் நிலை ஏற்படும் என்று சமூக நல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து சென்னையில் சமூக ஆர்வலர்கள் ஸ்ரீவத்ஸன், பூஜா, சரவணன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் 2100-ஆம் ஆண்டுக்கு கடல்மட்டம் 1 மீட்டருக்கு உயர்ந்துவிடும் என 2012-ஆம் ஆண்டு இஸ்ரோ அறிக்கை வெளியிட்டது.

அவ்வாறு கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் தமிழகத்தில் 3029.33 சதுர கி.மீ. பரப்பளவு கடலில் மூழ்கி லட்சக்கணக்கான வீடுகள் மூழ்கும். சென்னையை பொறுத்தவரை மணலி, எண்ணூர் அனல் மின் நிலையங்கள், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு உள்ளிட்டவை கடல்நீர் மட்ட உயர்வின் காரணமாக நீரில் மூழ்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் செய்யூர் அனல் மின் நிலையமும் மூழ்கும். கடற்கரையில் இருந்து மக்கள் வெளியேறுவதே இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க கூடிய ஒரே வழி

Social activists and environmental activists needs amendment in Coastal Regulation Zone. They also says about what happened when water level in coastal areas increases.

Recommended