இந்துஜாவை எரிக்க பெட்ரோல் கேனுடன் திட்டமிட்டு வந்த ஆகாஷ்...உறவினர்கள் பகீர்- வீடியோ

  • 7 years ago
காதலிக்க மறுத்த இந்துஜாவை குடும்பத்தோடு பெட்ரோல் ஊற்றி எரித்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டே ஆகாஷ் வந்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகர், 7வது தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருக்கு மகள்கள் இந்துஜா,23 நிவேதா, 21. மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் கனடாவில் வேலை செய்து வருகிறார்.

திங்கட்கிழமையன்று நள்ளிரவில் இவரது வீட்டில் பலத்த சப்தமும் கூக்குரலும் கேட்டது. அப்போது அங்கே ஒரு வாலிபர் கையில் மஞ்சள் கலர் கேனுடன் நின்று கொண்டு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அந்த நபரின் ஆகாஷ், அவர் இந்துஜாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்க மறுத்த இந்துஜாவை குடும்பத்தோடு கொலை செய்யும் திட்டத்தோடு கையில் பெட்ரோலுடன் வந்து வாக்கு வாதம் செய்தார்.
இந்த காட்சியை பார்த்த அக்கம் பக்கத்தார் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தீயை அணைக்க முயற்சி செய்த போது பலருக்கும் தீ காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தீயணைப்புத்துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்தனர்.

Relatives of Induja have said that Akash had a plan to burn Induja and came with petrol can

Recommended