Do you want to remove all your recent searches?

All recent searches will be deleted

ஓ மை காட்... இப்படி கை விட்டுட்டீங்களே... திகிலடித்திருக்கும் டிடிவி- வீடியோ

10 months ago41.9K views

வருமான வரித்துறை அதிகாரிகளின் கிடுக்கிப் பிடியால் திகிலடித்துப் போயிருக்கிறார்கள். கும்பிட்ட சாமி எல்லாம் இப்படி கை விட்டு விட்டதே என்று குழம்பி போயிருக்கிறாராம் டிடிவி தினகரன்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, கட்சி ஆட்சியை வசப்படுத்த சசிகலா திட்டம் போட்டார். சசிகலாவின் மொத்த குடும்பமும் அதிகாரத்திற்கு வர ஆசைப்பட்டது. ஆனால் டிடிவி தினகரன் அதற்கு கடிவாளம் போட்டார்.
முதல்வர் கனவோடு இருந்த சசிகலாவிற்கு முன்வினை பயன், சொத்துக்குவிப்பு வழக்கு ரூபத்தில் வந்தது. சசிகலா சிறைக்கு போக நேர்ந்தது. கட்சி, ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைத்தார் தினகரன். ஆனால் அவர் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைதாகி சிறை சென்றார். கட்சியும், ஆட்சியும் கை விட்டு போனது.திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த டிடிவி தினகரன், சில நாட்களிலேயே பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு சென்று மிளகாய் யாகம் நடத்தினார். இதன் மூலம் எதிரிகளை அழிக்க முடியும் என்று நம்பினார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரையில் புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. அங்கு கடந்த ஜூன் மாதம் சென்றார். சந்திரமவுலீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.பின்னர் வக்ரகாளியம்மன் சன்னதிக்கு சென்றார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் மூலஸ்தானம் அருகே அமர்ந்து 30 நிமிடம் மவுனமாக இருந்து தியானம் செய்தார்.

After IT Raids TTV Dinakaran families are stranded and going to temples to seek the blessings of the Gods.

Report this video

Select an issue

Embed the video

ஓ மை காட்... இப்படி கை விட்டுட்டீங்களே... திகிலடித்திருக்கும் டிடிவி- வீடியோ
Autoplay
<iframe frameborder="0" width="480" height="270" src="//www.dailymotion.com/embed/video/x68y2sz" allowfullscreen allow="autoplay"></iframe>
Add the video to your site with the embed code above