Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது லட்சுமி என்ற குறும்படம். இயக்குநர் கவுதம் மேனனின் யூடியூப் சேனல்களில் ஒன்றான என்டெர்டெயின்மென்டில் வெளியிடப்பட்டதுதான் லட்சுமி குறும்படம். கள்ளக்காதல்தான் கதையின் மையக்கரு. ஆனால் அதை நியாயம் கற்பிக்கும் காட்சிகளை இயக்குநர் சர்ஜன் செய்திருந்தார். அன்றாடம் ஒரே மாதிரி வேலை பார்த்து சலித்துப்போகும் பெண் ஒருவர், வடிகால் தேடி வேறு ஆடவன் வீட்டிற்கு சென்று அன்றே அவனிடம் தன்னை பறி கொடுப்பதே கதை.இந்த கதையில் இரு வகைகளாக காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது. லட்சுமி தனது கணவனோடு பேசும் கால கட்டம், குழந்தையை பள்ளிக்கு கிளப்பும் பகுதி போன்றவை பிளாக் அன்டு ஒயிட்டிலும், கள்ளக்காதலனுடன் பழகும் காட்சிகள் வண்ணமயமாகவும் உள்ளது.லட்சுமி கள்ளக்காதலுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பதால், அது வண்மயமாக காட்டப்படுவதாகவும், பிளாக் அன்டு ஒயிட் காட்சிகள் லட்சுமி கதாப்பாத்திரத்தின் எரிச்சல் வெளிப்பாடு எனவும்தான் பெரும்பாலான பார்வையாளர்கள் நினைத்திருப்பார்கள்.

One can watch Lakshmi short film in this angle too, in which she can see as a better woman.

Recommended