Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலினும் வைகோவும் சந்தித்து பேசினர். அப்போது கருணாநிதியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்ததாக கூறினார். பண மதிப்பிழப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று நடக்கும் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார். அப்போது கலிங்கப்பட்டியில் இருந்து சென்னை செல்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருந்தார்.மதுரை விமான நிலையத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் வெளியே வந்தபோது வைகோ அங்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் கை குலுக்கி நலம் விசாரித்தனர். மதுரையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்ததாக வைகோவிடம், ஸ்டாலின் கூறினார்.அப்போது வைகோ தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்தார். ஸ்டாலின், அப்பா நலமாக இருப்பதாக தெரிவித்தார். விரைவில் தலைவரை வீட்டில் வந்து சந்திப்பதாக வைகோ, மு.க.ஸ்டாலினிடம் கூறினார். கருணாநிதியின் உடல்நிலை குறித்தும், மோடி சந்திப்பு குறித்தும் ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார் வைகோ.

DMK working president M.K Stalin and MDMK general secretary Vaiko met inMadurai Airport on Tuesday.

Category

🗞
News

Recommended