கட்சி ஆரம்பிக்க ரூ.30 கோடி கேட்ட ஒரே தலைவர் நம்ம கமல்தான்...வீடியோ

  • 7 years ago
உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடமே பணம் கேட்ட தலைவர் கமல்ஹாசன்தான் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக ஆட்சியாளர்களை விமர்சிக்க கமல் ஆரம்பித்த நேரத்திலிருந்தே அவரை ஆட்சியாளர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இதில் கமலை கடுமையாக விமர்சித்தவர் அமைச்சர் ஜெயக்குமார். அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொம்மை அல்ல. நினைத்தவுடன் வாங்கிக் கொள்வதற்கு என்றும் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்றும் விமர்சித்திருந்தார்.ஊழல், விவசாயிகள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, மீனவர்கள்,நீட் தேர்வு, டெங்கு. மழை வெள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகளில் கமல் குரல் கொடுத்து வருகிறார். ஆயினும் அதற்கு அமைச்சர்கள் சரியான பதிலடியை கொடுக்காமல் அரசியலுக்கு வரட்டும் அப்புறம் பதில் அளிக்கிறோம் என்று அவரை சீண்டினர்.டுவிட்டரில் மட்டும் நடிகர் கமல் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்ததை அடுத்து அவரை டுவிட்டர் அரசியல்வாதி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கலக்கப்படும் எண்ணூர் துறைமுக பகுதியை பார்வையிட்டு முதல் முறையாக களத்தில் இறங்கினார்.

Minister Jayakumar says that no one in the world demands money to start party from the cadres. The one and only is Kamal hassan.

Recommended