கோஹ்லியை நேற்று பழிக்கு பழி வாங்கிவிட்டேன்..ஹர்திக் பாண்டியா கொக்கரிப்பு- வீடியோ

  • 7 years ago
நேற்று ராஜ்கோட்டில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையில் நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கு பின் கோஹ்லிக்கு ஹோட்டல் அறையில் சிறப்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோஹ்லி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை இந்திய அணி வீரர்களுடன் கொண்டாடினார். பிறந்த நாள் விழாவின் போது எப்போதும் போல் கோஹ்லி உடல் முழுக்க கேக் பூசி இந்தியா வீரர்கள் கலாட்டாவாக பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்த நிலையில் நேற்று கோஹ்லியை பழிக்கு பழி வாங்கிவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் மற்ற வீரர்களையும் பழிக்கு பழி வாங்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.
இன்று 29 வயதை அடையும் இந்திய கேப்டன் கோஹ்லி சரியாக 12 மணிக்கு தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். நேற்று போட்டியை முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு சென்ற இந்திய வீரர்கள் விராட் கோஹ்லிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

Indian team captain Virat Kohli turns 29 today. He celebrated his birthday with indian team mates in Rajkot. In his birthday celebration Harthik Pandya says he took on Kohli

Recommended