வெள்ள சேதத்தை தவிர்க்க கமல் அதிரடி..வீடியோ

  • 7 years ago
விவசாயிகளுடன் இணைந்து கமல் நற்பணி இயக்கத்தினர், ஏரி, குளங்களை செப்பனிட உள்ளதாக கமல்ஹாசன் இன்று அறிவித்தார். விளைச்சல் பாதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்பட விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழக அனைத்து விவசாயிகளின் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சிறப்பு கூட்டம் சென்னை அடையார் முத்தமிழ் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், நீரியியல் வல்லுனர் எஸ்.ஜனகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்

கூட்டத்திற்கு பிறகு கமல் பேசுகையில், இந்தியாவில் அதிகம் வரி கட்டும் மாநிலங்கள் தமிழகமும், மகாராஷ்டிராவும்தான். வேறு மாநிலங்களில் விவசாயிகள் கடன் விலக்கி விடப்படுகிறது. ஆனால் இங்கு இருக்கும் நிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறது. ஒரு ஆறே காணாமல் போய்விட்டது. அதுகுறித்து விரைவில் தகவல் வெளியே வரும்.

Kamal says his team of 5 lakh members will do Lake and River recovery work with farmers.

Recommended