மழை காலங்களில் ஊபர், ஓலா போன்ற கால் டாக்சி நிறுவனங்கள் சென்னைவாசிகளை கைவிட்டுவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சில கிலோ மீட்டர் தூரத்திற்கு பல ஆயிரங்களை டாக்சி டிரைவர்கள் கேட்பதால் பயணிகள் பெரும் அதிர்ச்சியுள்ளனர். என்னதான் தனியார் டாக்சிகள் நமது வரிப்பணத்தில் போடப்பட்ட சாலைகளில் ஓடி லாபம் சம்பாதித்தாலும், பெருமழை காலங்களில் அவர்கள் வசதியை பார்த்துக்கொண்டு மக்களை கைவிடுவதுதான் தொடர் கதையாக நடக்கிறது. சென்னையோ, பெங்களூரோ, மும்பையோ, வெள்ளம் பாதித்த பகுதிகளில் இதுதான் நிதர்சனமாக உள்ளது. இப்போது இதன் சூட்டை சென்னைவாசிகள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து வருகிறார்கள்.சென்னையில் திடீரென இரவில் மழை பெய்வதால் உடனே வீடுகளுக்கு திரும்ப மக்கள் ஆட்டோக்களையோ, கால்டாக்சிகளையோதான் நம்புகிறார்கள். ஆனால் பெரிதாக தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும் கால் டாக்சி நிறுவனங்களோ அப்போதுதான் காலை வாருகின்றன. சென்னையில் ஓலா, ஊபர், மேரு, என்டிஎல் போன்ற கால்டாக்சிகள் பிரபலமாக உள்ளன. ஆனால், இவற்றில் எதுவுமே தேவைப்படும் மழைக்காலத்தில் கை கொடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
Chennaiiites were left in the lurch on Thursday night by taxi companies. Taxi aggregators like Ola, Uber, Meru and NTL Taxi failed the city when it needed them the most.