Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
டெல்லியில் நடந்த பிசிசிஐ அண்டர் 19 பெண்கள் போட்டியில் ஒரே போட்டியில் மொத்தம் 136 வைடு பந்துகள் வீசப்பட்டு இருக்கின்றன. நாகலாந்து அணியும், மணிப்பூர் அணியும் மோதிய இந்த போட்டியில் இந்த 'சாதனை பவுலிங்' வீசப்பட்டு இருக்கிறது. இதில் நாகலாந்து அணி 42 வைடு பந்துகளும், மணிப்புர் அணி 94 வைட் பந்துகளும் வீசியது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நேற்று மணிப்பூர் மற்றும் நாகலாந்து அண்டர் 19 பெண்கள் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வடகிழக்கு அணியம், பிஹார் அணியும் புதிதாக அண்டர் 19 பெண்கள் அணியில் இணைந்திருப்பதை வரவேற்கும் விதத்தில் இந்த போட்டி நடத்தப்பட்டது. பிசிசிஐ வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட் போட்டியை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த போட்டியை நடத்தியது.இதில் முதலில் ஆடிய நாகலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்தது. ஆனால் இதில் மணிப்பூர் அணியால் மொத்தம் 94 வைட் பந்துகள் போடப்பட்டு இருக்கின்றன.

An astounding 136 wide balls were bowled during a match between Nagaland and Manipur played at Dhanbad on Wednesday in BCCI U-19 women's one-day level series. The match, which is a part of the inaugural Northeast-Bihar U-19 one-day competition being organised by BCCI.

Category

🥇
Sports

Recommended