சென்னையில் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் மழை- வீடியோ

  • 7 years ago
சென்னை நகரில் காலையில் இருந்து மழை கொட்டி தீர்த்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மழைநீர் சூழ்ந்துள்ளது.

இன்று காலை முதல் சென்னை நகரில் திடீரென கனமழை பெய்தது. இரண்டு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். வாகனங்கள் அனைத்தும் நெரிசலில் சிக்கியதால் இஞ்ச் பை இஞ்சாக ஆமை வேகத்தில் சென்றன.


மழையினால் தண்ணீர் தேங்கியுள்ளது குறித்து எந்த வித நடவடிக்கையும் மாநகராட்சி இதுவரை எடுக்க வில்லை என்று தங்கள் பகுதிகளை கண்டுகொள்ளவும் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள்


மழையினால் தண்ணீரில் தத்தளித்து வரும் சென்னை வாசிகளை அரசு துரித நடவடிக்கை எடுத்து காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.

Category

🗞
News

Recommended