கடலோர மாவட்டங்களில் கனமழை- வீடியோ

  • 7 years ago
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதையடுத்து தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது மன்னார் வலைகுடா பகுதிகளில் நிலை கொண்டுள்ளதால் வரும் 4ம் தேதி வரை தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உட்புறங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருவள்ளூர், கடலூர், இராமநாதபுரம், நாகை புதுக்கோட்டை, புதுவை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் நேற்று கனமழை பெய்தது. வேலூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று இரவு ஆரம்பித்த மழை அதிகாலை வரை வெளுத்து வாங்கியது. இதனால் இரவு பணியாளர்கள் மட்டும் இன்றி வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர். ஒருசில சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். மழைக்கு இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மழை நீடிக்கும் பட்சத்தில் வெள்ள தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மருத்துவர்கள் குழு தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் வெள்ள சேதங்கள் ஏற்படுவது குறித்து தகவல் தெரிவிக்க சிறப்பு தொலை பேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Recommended