கடன் சுமையால் குடும்பமே தற்கொலை- வீடியோ

  • 7 years ago
கடன் சுமையால் ஆசிரியையின் கணவர் இரட்டை குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுதா. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் செந்தில்குமார் பழக்கடை மற்றும் பங்குசந்தை தொழில்களை செய்து வருகிறார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக மனம் உடைந்து வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில் 11மதமே ஆன விசிதா விவிதா ஆகிய இரட்டை குழந்தைளை கொன்றுவிட்டு கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் உயிரிழந்தவர்களின் உடலை படம் எடுக்க சென்ற செய்தியாளர்களை அவர்களின் உறவினர்கள் செய்தி எடுக்க விடாமல் தடுத்த்துடன் இறந்தவர்களின் புகைபடத்தினையும் தர மறுத்தனர்.

Dis :Husband and wife committed suicide by killing twin babies

Recommended