விக்ரம் மகள் கல்யாணத்தில் கருணாநிதி -வீடியோ

  • 7 years ago
தனது கொள்ளுபேரனின் திருமணத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பார் என்ற தகவலால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டிரக்கியாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவின. ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறி வந்தனர்.இந்நிலையில் கடந்த வாரம் கருணாநிதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த முரசொலி புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.

DMK leader Karunanidhi going to participate in the marriage function on November 1st. Karunanidhi's great grandson Manuranjeeth is getting marriage with Actor vikram's daughtor on November 1st.

Recommended