தேசிய கீதம் பாடும் போது தீ குளிக்க முயற்சித்த பெண்கள்... அதிர்ந்த முதல்வர்-வீடியோ

  • 7 years ago
சிவகாசியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் இருந்த விழா மேடை எதிரே மாமியார், மருமகள் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
முதல்வர் பேசி முடித்த உடன், தேசிய கீதம் ஒளிபரப்பானது. அப்போது பின் வரிசையில் இருந்து வந்த 2 பெண்கள், தங்களின் கைகளில் இருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை திடீரென ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
இதை கவனித்த போலீஸார் உட்பட பலர் அவர்களை காப்பாற்றினர். இதனால் விழா அரங்கமே பரபரப்பானது. முதல்வர் உட்பட அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Women who set self on fire in front of Chief Minister MGR birthday celebration stage in Sivakasi.

Recommended