Skip to playerSkip to main content
  • 11 years ago
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை
என் அன்பே என் அன்பே இந்த காயம் ஆறிவிடும் தூங்கு
என் கண்ணே என் மணியே உன்னை தன்னந்தனியாய் நீ தாங்கு
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை


கடவுளின் உருவம் எதுவென மழலை சிரிப்பிலே அறிய வைக்கின்றாய்
சேற்றிலே மலர்ந்த தாமரை மலரைப் போலவே நீ தோன்றினாய்
பூமியிது புனிதமில்லை ஆயிரம் அசுத்தங்கள் உள்ளது
தீயிலுமே நீந்தி வர நீ இன்று கற்றுக்கொள் நல்லது
இந்த உலகம் என்பது இன்பதுன்பம் உள்ள பாதையடா
நீ முட்டிமோதி எழ வழிகள் சொல்லித்தரும் கீதையடா
ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை


நதியிலே விழுந்த இலையென உனது பயணங்கள் தொடர்ந்து போகட்டும்
அலைவரும் அடுத்த திருப்பத்தில் உனது கரை எதிரிலே தோன்றிடும்
வேர் எங்கோ செடி எங்கோ நீ இங்கே தனியாய் பூக்கிறாய்
வழிதவறி வீட்டில் வந்த பறவையைப் போலவே பார்க்கிறாய்
நீ கடவுள் எழுதி வைத்த மண்ணில் வந்த ஒரு கவிதையடா
அதன் இடையில் இரு உயிர்கள் செய்த எழுத்துப்பிழை பாவமடா

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொரு வானவில்லை...

Category

🎵
Music
Comments

Recommended