Skip to playerSkip to main content
  • 11 years ago
This is a video created out of a song composed by Sri A.K.Rajagopalan, Founder and Manager of the Much popular Tamil Web-Magazine "Mazalais". He is a Versatile Genius gifted with several capabiities. Here-below is his poem (Tamil) குறவர்கு லக்கடவுள் குமரனைத் தொழுதுநின்று
குறவன் தமிழ்பாடுமே முருகன் வேல்
திறனது நமைக் காக்குமே உலகில்
அறமது தழைத் தோங்குமே!
மருதம லைக்குவந்து இருகை தொழுதுவேண்டி
வருபவர் எல்லோர்க்குமே முருகனின்
அருளுண்டு எந்நாளுமே! வாழ்வில்
மகிழ்வ தொன்றே காணுமே!
பழனி மலைக்குச் சென்று பாடிக்காவடி தூக்கும்
பக்தர்கள் வாழ்வில் துன்பம் நீங்கியே
முக்தி பெருவாரன்றோ? அரிய
சக்தி பெருவா ரன்றோ?
ஸ்வாமி மலைக்குவந்து ஸ்வாமிநாதனைப் பணிய
ஸ்மரணை சிறப்பாகுமே அன்னை
சரஸ்வதி அருள் சேருமே அவர்க்கு
சகல கலையும் வருமே!
திருச்செந் தூர்க்கு வந்து நாழிக்கிணறு கண்டு
தீர்த்த மருந்திச் சென்றால் வினைகள்
தீர்ந்து நலம் கூடுமே அவர்க்கு
தெய்வ பலம் வளருமே!
திருப்பரங்குன்றம் சென்று ஒருபடத் துதிப்போர்க்கு
திருமகள் அருள் சேருமே! என்றும்
செல்வம் செழித்திடுமே வாழ்வில்
நல்லறம் பொங்கி வருமே!
திருத்தணி மலையேறி விருத்தமும் பாடிவந்தால்
வருத்த மெல்லாம் நீங்குமே மனதின்
அழுத்த மெல்லாம் அடங்குமே நன்கு
பழுத்த ஞானம் வளருமே!
பழமுதிர்ச் சோலை சென்று பக்திசெய்வோர் தமக்கு
பழவினை யாவும் தீருமே! தீர்ந்து
பாக்கிய முண்டாகுமே பரமன்
பார்வதி அருள் கூடுமே!.

Category

🎵
Music
Be the first to comment
Add your comment

Recommended